--- --:--:-- --

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

7

மிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

மன்னார்வளைகுடா தென்மேற்கு வங்கக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon