ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை உறுதி..!
வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
1997-ல் வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, ஜவாஹிருல்லா மீது சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜவாஹிருல்லா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலி ஆகியோருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மேலும், எஸ்.சையத் நிசார் அகமத், ஜி.எம். ஷேக் மற்றும் நல்ல முகமத் கலஞ்சியம் ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது.இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.





