--- --:--:-- --

பெண்கள் பெயரில் வீடு, நிலம் பதிந்தால் 1% பத்திரப் பதிவுக் கட்டணம் குறைப்பு..!

2

பெண்கள் பெயரில் வீடு, நிலம் பதிந்தால் 1% பத்திரப் பதிவுக் கட்டணம் குறைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மகளிருக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

 

அந்த வகையில் பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கை உறுதி செய்யும் வகையில், அவர்கள் பெயரில் சொத்துக்கள் மற்றும் விளைநிலங்களை பதிவு செய்யும்போது பதிவுக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.குறிப்பாக, 10 லட்ச ரூபாய் வரையிலான வீடு அல்லது நிலத்தை பெண்கள் பெயரில் பதிவு செய்தால், அதற்கான பதிவுக் கட்டணத்தில் 1% குறைக்கப்படும் என்றும், இந்த சலுகை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் பட்ஜெட்டில் அறிவித்தார்.

 

மகளிரின் சுயசார்பும் மகளிர் நலன் காக்க சுய உதவிக் குழுக்கள், விடியல் பயணம், மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண். தோழி பணிபுரியும் பெண்கள் விடுதியென பல்வேறு முன்னோடித் திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வண்ணம் நமது அரசு செயல்படுத்தி வருகிறது.

 

இதன் அடுத்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

Right Menu Icon