ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாகிறது..!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமியுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஹாஸ்மோ , கலையரசன் ஆகியோர் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சுருளி எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
நெட்ப்லிக்ஸ் ஓடிடி தளத்தின் வெளியாக உள்ள திரைப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்ச் ,ஜெர்மன் உள்ளிட்ட 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு 190 நாடுகளில் வெளியிடப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.







