கண் மருந்தால் பலருக்கு பார்வை போன பரிதாபம்..!
சென்னையில் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலருக்கு பார்வை பறிபோனதாக அமெரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற மருந்தால் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்ளில் 68க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பார்வை பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. எட்டு பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் நான்கு பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட கண் அகற்றப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சொட்டு மருந்து பயன்படுத்திய நோயாளிகள் பலருக்கும் கண் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சொட்டு மருந்து திரும்ப பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





