சல்மான்கானின் ராதே என்ற படம் ஒரே நாளில் 40லட்சம் பேர் பார்த்துள்ளதாக அறிவிப்பு..!
ஒடிடி தளத்தில் வெளியான ஒரே நாளில் லட்சக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற பெருமையை நடிகர் சல்மான்கானின் ராதே என்ற படம் பெற்றுள்ளது.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் ஆகியோர் நடித்துள்ள இப்படம் கடந்த 13ஆம் தேதி இணையதளத்தில் நேரடியாக வெளியானது. இந்த படத்தை ஒரே நாளில் 40 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருக்கும் சல்மான் கான் முதல் நாளில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.






