ராஜினாமா செய்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்?
பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக இம்ரான்கான் இன்று அறிவிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைப்பதற்கு இம்ரான்கான் தான் காரணம் எனக்கூறி அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இதையடுத்து இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இம்ரான் கானுக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில் 24 எம்பிக்களுக்கும் எதிராக திரும்பியுள்ளனர்.
மேலும் இம்ரான்கான் அமைச்சரவையில் இடம் பெற்ற 50 பேர் கடந்த சில நாட்களாக வெளியே தென்படவில்லை. இவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் இருப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் தலைநகரில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். இதில் தனது ராஜினாமா முடிவை அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.






