--- --:--:-- --

மகளின் உடலை 10 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற தந்தை..!

1

டல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்த மகளின் உடலை தந்தையை தோளிலேயே 10 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சத்தீஷ்கர் மாநிலம் அம்தாலா மாவட்டத்தில் வசித்து வரும் ஈஸ்வர்தாஸ் அவரது உடல்நலம் பாதித்த தனது 7 வயது மகளை லக்கண்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற்ற பொழுதும் பலனின்றி சிறுமி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

 

மகளின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல தந்தை மருத்துவமனையிடம் ஆம்புலன்ஸ் உதவி கேட்ட பொழுது அவர்கள் அதை அலட்சியம் காட்டியதாக தெரிகிறது.

 

இதனால் மகளை இழந்த சோகத்தை நெஞ்சில் ஏந்திக் கொண்டு அவளின் உடலை தோளில் சுமந்து கொண்டு கண்ணீரோடு சொந்த ஊரை நோக்கி 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று உள்ளார்.

Right Menu Icon