ராஷ்மிகாவை காதலிக்கிறாரா நடிகர் விஜய் தேவரகொண்டா..!
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் LIGER பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்து சண்டை வீரராக நடித்துள்ளார்.
அப்படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் அப்பட ட்ரைலர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் அடுத்த மாதம் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இந்நிலையில் தற்போது இப்பட ப்ரோமோஷனுக்காக விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை அனன்யா பாண்டே காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் பல விதமான சர்ச்சை கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. மேலும் விஜய் தேவரகொண்டாவின் காதல் உறவு குறித்து பதிலளித்துள்ள அனன்யா பாண்டே. அவர் நடிகை ராஷ்மிகாவை காதலிப்பது குறித்து மறைமுகமாக பதில் அளித்திருக்கிறார்.





