--- --:--:-- --

விதைகள் அடங்கிய தேசியக்கொடி அறிமுகம் – மாணவர்களிடம் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்க புது முயற்சி

10

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கொண்டாட்டத்தின்போது மாணவர்கள் ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தும் தேசிய கொடியை பயன்பெறும் வகையில் தனியார் நிறுவனத்தினர் மாற்றியுள்ளனர். குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் பள்ளிகள் கொடிகள் வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

 

மக்கும் தன்மை கொண்ட துணி, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கொடிகள் என எந்த வகையான கொடியாக இருந்தாலும் அதன் பயன்பாடு ஒரு நாள்தான். அதனை மாற்றும் முயற்சியாக தனியார் பண்பலை நிறுவனமான ரேடியோ சிட்டி விதைகள் அடங்கிய தேசிய கொடியை பள்ளி மாணவர்களுக்கு வழங்கி உள்ளது.

 

தேசியக் கொடியின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் அதே நேரத்தில் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசியக்கொடியில் தக்காளி, வெண்டை, கத்தரிக்காய், அவரை போன்ற விதைகள் வைக்கப்பட்டுள்ளன.

 

இந்தத் தேசியக் கொடிகளை எப்படி விதைக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தேசியக்கொடியின் பின்புறமுள்ள க்யூ ஆர் கோட் ஐ ஸ்கேன் செய்தால் செய்முறையை அறிந்துகொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon