--- --:--:-- --

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு

1

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிரப்பப்படவுள்ள அலுவலக உதவியாளர் ( பொதுப் போட்டி , பெண் , ஆதரவற்ற விதவை ) பணியிடத்திற்கு இன்று காலை நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) அ. சிவசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சங்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மண்டலம்-2) பி.நாகராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) ச. காமேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மண்டலம்-4) கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மண்டலம்-3) ஜி. தீனதயாளக்குமார் ஆகியோர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டவர்களின் மாற்றுச் சான்று, சாதி, இருப்பிடச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை , குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சிறப்புத் தகுதிக்கான சான்று ஆகியவற்றை சரி பார்த்தனர். உரிய ஆவணங்கள் சரி பார்த்தலுக்கு பின் தகுதியானவர்களின் பெயர் பட்டியல் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.பிரதீப்குமார் ஆகியோரிடம் அனுப்பி வைக்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon