--- --:--:-- --

25 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி..!

7

டுத்த 25 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பலர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் 92வது பிறந்த நாள் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது.

 

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முடியுமா என உலக நாடுகள் யோசித்த போது, அந்த திறமையை நிலைநாட்டியது இந்தியா தான். தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் சிறந்த நாடு என இந்தியா காட்டி உள்ளது. முடியுமா, முடியாதா என்ற கேள்விகளுக்கு இஸ்ரோ தான் பதிலளித்துள்ளது.

 

சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதாரண கல்வியை படித்தவர் கலாம். அவர் இஸ்ரோ பொறியாளர், ராக்கெட் பொறியாளர், ஜனாதிபதி என பல பரிமாணங்களில் முன்னேறியவர். நீங்களும் அது போல் முன்னேற வேண்டும். நானும் சாதாரண பள்ளியில் படித்தவன். அனைத்து சமூக மக்களின் அன்பை பெற்று வருகிறேன். அது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

 

ஒரு முறை பிஎஸ்எல்வி தோல்வியடைந்த போது, அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமை சந்தித்து விளக்கினோம். அப்போது சரமாரியாக கேள்வி எழுப்பிய கலாம், எதிர்காலத்தில் அதுபோல் நடக்காதவாறு இருக்க அறிவுரை வழங்கினார். அதை நினைத்து பெருமிதம் கொள்கிறோம்.அடுத்த 25 ஆண்டுகளுக்கு தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா இருக்கும். இவ்வாறு சோம்நாத் பேசினார்.

Right Menu Icon