--- --:--:-- --

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும்..!

3

ப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றிய நிலையில் டெல்லியில் பாதுகாப்புக்காக அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

 

டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் பங்கேற்றனர்.

 

ஆப்கானிஸ்தானத்தில் அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவில் மேற்கத்திய எல்லைகளில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

 

ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon