--- --:--:-- --

பேஸ் புக்கில் பாகிஸ்தான் பெண்னை காதலித்து எல்லைக்கு சென்ற இந்திய இளைஞர்..!

6

மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் முகமது சித்திக் என்பவர் தனது மகனான சித்திக் முகம்மது ஷிஜானை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து விசாரணை நடத்திய போலீசார் விசாரணை அவரின் மொபைல் லொகேஷன் இந்தியா – பாகிஸ்தான் எல்லையோர பகுதியான கிராமத்தை காட்டுவதை கண்டறிந்தனர்.

 

அதிர்ச்சி அடைந்த போலீசார் குஜராத்தில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் அனுப்பி விட்டனர். குஜராத்தின் கட்ச் வழியாக பாகிஸ்தான் சென்றடைய திட்டமிட்டுள்ளார். பாகிஸ்தான் எல்லைப் பகுதியை நெருங்கும் முன்பு அவர் விட்டுச் சென்ற அவரது பைக்கை பார்க் எனும் இடத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

 

அங்கு பாகிஸ்தான் எல்லையை அடைவதற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டருக்கு முன்னதாக கட்ச் பகுதியில் வரட்சியால் சோர்வடைந்து பாதிக்கப்பட்டு சுய நினைவு இழந்து 2 மணி நேரம் கிடந்துள்ளார். கிட்டத்தட்ட ஆயிரத்து 200 கிலோ மீட்டர் பயணம் செய்து அப்பகுதிக்குச் சென்று உள்ளார்.

 

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான சம்ரா என்னும் பெண்ணை காதலிப்பதாகவும் இவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சி எனும் இடத்தில் வசித்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் தான் பாகிஸ்தான் செல்ல முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon