கோவையிலிருந்து விமானங்களில் சரக்கு ஏற்றுமதி அதிகரிப்பு
தீபாவளி பண்டிகை 20-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் இருந்து விமானத்தில் சரக்குகள் ஏற்றுமதிக்கான ‘புக்கிங்’ அதிகரித்துள்ளது. இதுகுறித்து கோவை விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது, உள்நாட்டு பிரிவில் வழக்கமாக மாதந்தோறும் 500 டன்னுக்கு கீழ் சரக்குகள் கையாளப்படும்.
ஆனால் கடந்த மாதம் 547 டன்னாக அதிகரித்தது. அதுவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது சரக்கு புக்கிங் அதிகரித்துள்ளதால் இந்த மாதம் 625 டன்களுக்கு மேல் சரக்குகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.





