கொரொனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம்..!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரொனா தடுப்பூசி போட வந்த பெண்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கலா என்ற ஊரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 3 பெண்கள் தடுப்பு ஊசி போட சென்றுள்ளனர்.
ஊசி போடப்பட்ட பிறகு தங்களுக்கு ஒரு சீட்டு கொடுக்கப்பட்டதாகவும் அதில் வெறிநாய்க்கடிதடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருந்ததாகவும் அந்த பெண்கள் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
தவறு நடந்திருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.






