--- --:--:-- --

கோவையில் சாவிலும் இணைபிரியா தம்பதி !!!

கோவையில் சாவிலும் இணைபிரியா தம்பதி !!!

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதிகள் ஒருவர் பின் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சுந்தராபுரம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

கோவை சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட் பேஸ்-1 பகுதியை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதிகள் மணி(74) மற்றும் சரோஜினி(72). ஒய்வு பெற்ற ஆசிரியரான சரோஜினி கடந்த 8 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்நிலையில் நேற்று இரவு சரோஜினியின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் அவர் உயிரிழந்தார். தொடர்ந்து சரோஜினியின் கணவர் மணி அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தார்.

 

பின்னர்,அ௫கில் உள்ளவர்கள் அவரை ம௫த்துவனைக்கு அழைத்துசென்றுள்ளனர். ஆனால்,அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

மனைவி உயிரிழந்த 1 மணி நேரத்தில் சாவிலும் இணை பிரியாமல் கணவரும் உயிரிழந்த சம்பவம் கோவை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon