பிளிச்சி ஊராட்சியில் ரூ.34.20 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை.முன்னாள் எம்.பி. ஏ.கே. செல்வராஜ், எம்.எல்.ஏ. ஓ.கே. சின்னராஜ் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர் !!!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிளிச்சி ஊராட்சியில் இன்று ரூ.34.20 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.முன்னாள் எம்.பி.ஏ.கே.செல்வராஜ்,மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.
இதில் ரூ.19.20 லட்சம் மதிப்பீட்டில் மத்தம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் கூடுதல் பள்ளிக்கட்டிடங்கள்,ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஒன்னிப்பாளையம் பகுதியில் தார் சாலை மற்றும் தடுப்பணைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் நர்மதா துரைசாமி,ஒன்றியக்குழு உறுப்பினர் கல்பனா தண்டபாணி,பிளிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் சாவித்திரி ராஜன்,துணைத்தலைவர் ரவிச்சந்திரன்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் உதயகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயஸ்ரீ,அனிதா,பொறியாளர் சந்திரகலா,வார்டு உறுப்பினர்கள் கல்பனா,பிரேமா,சுப்பையன்,ஜோதிமணி,சின்னராஜ்,சரசு,பிரபா,வட்டார கல்வி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி,ஸ்ரீசுதா,தலைமை ஆசிரியர் தீபா மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,ஊராட்சி செயலர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







