வேளச்சேரியில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 60 சவரன் நகை கொள்ளை..!
சென்னை வேளச்சேரி அருகே வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 60 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. கோல்டன் அவென்யூ முதல் குறுக்கு தெருவை சேர்ந்த நாச்சியம்மாள் தனது தாயுடன் வசித்து வருகிறார்.
தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இவ்வாறு தனது வீட்டை பூட்டிவிட்டு உடுமலைப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அருகில் வசிப்பவர்கள் வீடு திரும்பி இருப்பதாக கூறியதையடுத்து நாச்சியார் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த பொழுது 60 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டது. அங்கு பதிவான கைரேகைகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






