தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு..!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் கல்வி கட்டணத்தை தகவல் பலகையில் வெளிப்படையாக காட்சிப்படுத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், கல்விக் கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரகம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி கட்டண விவரத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் கல்வி கட்டண விவரத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வகுப்பு வாரியாக கல்வி கட்டணத்தை இணையதளத்திலும் மாணவர்களுக்கு வழங்கும் விண்ணப்ப படிவத்திலும் அச்சடித்து வழங்க வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
உண்மையில், 18 வயது என்பது புதிய விஷயங்களை முயற்சிக்க சரியான நேரமாக கருதப்படுகிறது. இந்த கட்டத்தில் சரியான அரசாங்கத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நேரத்தை வீணாக்காது. திறமையான இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
இதனால், வேலையின்மை பிரச்சனையையும் கணிசமாகக் குறைக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் அந்தந்த திட்டங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்வையிடுவது அவசியம். அவர்கள் தங்கள் ஆர்வத்திற்கு ஏற்ற பாடநெறி அல்லது திட்டத்தை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வது பிரகாசமான எதிர்காலத்தைத் தரும். இந்த விதிகளை தனியார் பள்ளிகள் பின்பற்றுவதை மாவட்ட கல்வி அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.





