--- --:--:-- --

சனாதன தர்மத்தை மனதில் வைத்து சிறப்பாக பணியாற்றுவேன் – ஜி.ஆர்.சுவாமிநாதன்

10

திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என கொடுத்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இந்த உத்தரவிற்கு எதிராக தி.மு.க, வி.சி.க போன்ற கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், பொது கடமைகளை செய்யும் போது சனாதன தர்மத்தை மனதில் கொள்ள வைத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தாரா அறக்கட்டளை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதியாய் தனது எஞ்சிய பணிக்காலம் குறித்து ஆழமாகச் சிந்தித்ததாகவும், தனிப்பட்ட விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சிறந்த சேவையைத் தொடர்ந்து வழங்க வேண்டிய கடமையை, இந்நிகழ்வு தனக்கு மீண்டும் அழுத்தமாக உணர்த்தியுள்ளதாகவும் கூறியிருந்தார்.

 

மேலும், பொது கடமைகளை செய்யும் போது சனாதன தர்மத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பொது வாழ்வில் ஒருவரது பங்கையோ, குணத்தையோ வெறும் தொழில் ரீதியான அறிவு மட்டும் வரையறுக்காது என்று தெரிவித்தார். தொடர்ந்து, தனக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் பணிக் காலம் இருக்கும் நிலையில் முழுமையாக பணியாற்றுவேன் என்று நம்புவதாகவும், சனாதன தர்மத்தை மனதில் வைத்து சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் கூறியுள்ளார்.

Right Menu Icon