--- --:--:-- --

ரொம்ப அழகா இருக்க வெளியே விடமாட்டேன் கொடுமைப்படுத்திய கணவன்..!

7

ர்நாடக மாநிலம் பெங்களூருவில் அழகாக இருப்பதாகக் கூறி காதல் மனைவியை வீட்டுக்குள் அடைத்து வைத்து கணவன் துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில் சந்தேகத்தில் கொடுமை தாளாமல் மனைவி கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

நான்காண்டுகளுக்கு முன்பு வினய் என்பவரும், சங்கீதா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திலிருந்து மனைவியை சந்தேகக் கண்ணுடன் பார்க்க ஆரம்பித்தான். தனி மனித உரிமை மீறல்களை செய்ததாக கூறப்படுகிறது.

 

சில நாட்களாக சங்கீதாவை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வெளியே செல்லக்கூடாது, யாரிடமும் பேசக்கூடாது என துன்புறுத்தியதாக சொல்லப்படும் நிலையில் சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கீதா எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon