காதல் மனைவியின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன்..!
வரதட்சணை தராததால் காதல் மனைவியின் ஆபாச புகைப்படங்களை முகநூலில் பதிவிட்ட கணவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதன்பிறகு திருவொற்றியூரை சேர்ந்த விஜயபாரதி என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும் அதே பகுதியில் வசித்து வந்தனர். 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மனமுடைந்த அந்த பெண் விஜயபாரதியை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
அதனால் ஆத்திரமடைந்த கணவர் விஜயபாரதி மனைவியின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புகாரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






