பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு வாய்மொழி தேர்வு எவ்வாறு நடைபெறும்..!
பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான வைவா வாய்ஸ் எனப்படும் வாய்மொழித் தேர்வு ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆன்லைனிலேயே வாய்மொழித் தேர்வு நடைபெறும் என்றும் மாணவர்களின் ஆய்வு கட்டுரையை ஆன்லைன் மூலமே சரிபார்த்து ஒப்புதல் தர வேண்டும் என்றும் தேர்வு கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாணவர்களை நேரில் வர வளைக்கக் கூடாது என்றும் வரும் 24 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ள எழுத்து தேர்வுகளுக்கு உரிய என்னும் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.






