கல்லூரி மாணவியுடன் தவறான உறவு வைத்திருந்த கணவன்..! குழந்தைகளுடன் தீக்குளித்த மனைவி..!
கணவன் கல்லூரி மாணவியுடன் ஊரை விட்டு ஓடி சென்றதால் விரக்தி அடைந்த மனைவி இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அருகே பள்ளக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து. 45 வயதான முத்துவிற்கு ராதா என்ற மனைவியும் இரு மகன்களும் இருந்தனர்.
மூத்த மகன் அபிஷேக்குக்கு வயது பதிமூன்று. இளையவனுக்கு வயது 11. முத்துவிற்கு ரத்தினம் கோட்டை கிராமத்தை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துவிற்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் முத்து கல்லூரி மாணவியுடன் ஊரை விட்டு ஓடி விட்டதாக அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது. இதனை அறிந்து மனம் நொந்த முத்துவின் மனைவி ராதா கணவரின் செயலால் அவமானத்தாலும் வேதனையில் உள்ளார்.
இதனையடுத்து மாலையில் வீட்டிற்கு பெட்ரோல் வாங்கி சென்ற ராதா இரவு உணவருந்திவிட்டு இரு மகன்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து உறவு வைத்துள்ளார். பின்னர் வீட்டின் முன் பக்கமாக தாழிட்டுக் கொண்ட ராதா தன் மீதும் இரு மகன்கள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
குழந்தைகளின் அலறலும் ராதாவின் அலறலும் அந்த பகுதியையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வீட்டிலிருந்த ராதாவின் உறவினர்கள் சத்தியமூர்த்தி மற்றும் ஆனந்த் ஆகியோர் அவர்களை காப்பாற்ற போராடி இருக்கிறார்கள். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இளைய மகன் இறந்து சடலமாக கிடந்துள்ளார்.
உறவினர்கள் இருவரும் தீ காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாணவியுடன் தலைமறைவாகியுள்ள ராதாவின் கணவர் முத்துவை நாகுடி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.







