--- --:--:-- --

திருவண்ணாமலையில் வழி தெரியாமல் சுற்றித்திரிந்த 12 வயது சிறுவன்..!

2

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் சுற்றித்திரிந்த 12 வயது சிறுவனை காவல் துறையினர் மீட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பழைய பேருந்து நிலையம் அருகே சிறுவன் ஒருவன் வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வந்தவாசி தெற்கு காவல் உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி சிறுவனை அழைத்து விசாரித்து இருக்கிறார்.

 

அப்போது சிறுவன் தன் பெயர் சுந்தரபாண்டியன் என்றும் வீட்டிற்கு வழி தெரியாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சிறுவனை ஒப்படைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon