இட்லி சாப்பிட மறுத்ததால் குழந்தையை அடித்து கொன்ற பெரியம்மா..!
கள்ளக்குறிச்சியில் இட்லி சாப்பிட மறுத்த குழந்தையை அவரது பெரியம்மா அடித்து குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேல வழி கிராமத்தை சேர்ந்த ரோசாரியோ, ஜெயராணி தம்பதியினருக்கு 5 வயது பெண் குழந்தை பிறந்தது.
ஜெயராணி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்ததால் குழந்தையை ராணியின் மூத்த சகோதரி ஆரோக்கியமேரி வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இட்லி சாப்பிட மறுத்த குழந்தையை சாலையிலேயே அடித்த ஆரோக்கியமேரி வீட்டிற்குள் அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்தது. இதனையடுத்து ஆரோக்கியமேரியை காவல்துறையினர் கைது செய்தனர்.







