--- --:--:-- --

கணவன் மற்றும் கள்ளக்காதலிக்கு தர்ம அடி கொடுத்த மனைவி..!

2

தெலுங்கானாவில் மனைவி மற்றும் மகளை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவனை மனைவி சரமாரியாக தாக்கியுள்ளார்.

 

ஸ்ரீராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி விஜயா இவர்களுக்கு திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் மகன், மகள் என இரண்டு பேர் திருமண வயதில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

 

மனைவி மற்றும் குழந்தைகளை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். ரமேஷ் பின்னர் ரஞ்சிதா என்ற பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார். இந்த தகவல் அறிந்த மனைவி ரமேஷை அடித்து விரட்ட பொதுமக்களையும் உறவினர்களையும் விஜயா உதவிக்கு அழைத்து சென்றுள்ளார்.

 

பின்னர் அவருக்கும் அவருடன் இருந்த பெண்ணுக்கும் தான் அடி கொடுத்தனர். நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் ரமேசை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon