--- --:--:-- --

திருப்பதியில் அலைமோதிய கூட்டம்..!

3

லக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை மற்றும் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமை ஆகியவற்றால் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

 

இதனால் இலவச டோக்கன் பெறாமல் நேரடி இலவச தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி கும்பிட்டு செல்கின்றனர். எனவே நேரடி இலவச தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் தாங்கள் முறைக்காக சுமார் 24 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

 

இலவச டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 5 முதல் 7 மணி நேரமும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் 3 முதல் 5 மணி நேரம் காத்திருந்து ஏழுமலை யானை வழிபடுகின்றனர்.

 

நேற்று ஒரே நாளில் 74 ஆயிரத்து 468 பக்தர்கள் ஏழுமலையான வழிபட்டு கோவில் உண்டியலில் 3 கோடி 39 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

 

Right Menu Icon