--- --:--:-- --

3 நாட்கள் தொடர் பள்ளி விடுமுறை..!

2

ள்ளி மாணவர்களுக்கு அண்மையில் தான் காலாண்டு விடுமுறை நிறைவடைந்தது. அக்டோபர் தொடக்கத்திலேயே ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி என காலாண்டு விடுமுறையுடன், இந்த விடுமுறையும் சேர்ந்து வந்ததால் கொண்டாட்டம் அரங்கேறியது. இதையடுத்து எப்போது மீண்டும் விடுமுறை வரும் என மாணவர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

பள்ளிகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் அரையாண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதனிடையே அடுத்து தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். எப்படியும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

வரும் அக்டோபர் 18-ம் தேதி சனிக்கிழமை விடுமுறை, 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 20ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி விடுமுறை, அதைத் தொடர்ந்து 21-ம் தேதி பொதுமக்கள் ஊர் திரும்பும் வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தால் 4 நாட்கள் விடுமுறைக்கு வாய்ப்புள்ளது.

ஆகவே தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதே தனி மகிழ்ச்சி தான். பட்டாசுகள் விற்பனையும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதே சமயம் துணிக்கடைகளும் ஆஃபர்களை அள்ளி வீச தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தீபாவளிக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்டோபர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி அக்டோபர் 27 ஆம் நாள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக 27.10.2025 திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஆனால் அதே சமயம் அத்தியாவசிய பணிகள் மற்றும் அது சார்ந்த பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நவம்பர் 8-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon