மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஒருவாரத்திற்கு மேலாக காலை, மாலை என தொடர்ந்து 2 நேரமும் தங்கம் விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு வந்த நிலையில், நேற்று காலை தான் அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.
தொடர்ந்து மாலை வேளையிலே மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,340க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து அக்டோபர் 11ஆம் தேதியான இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,425க்கும் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,450க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,600க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.187க்கும், ஒரு கிலோ ரூ.1,87,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





