கொரொனாவுக்கு தடுப்பூசி வர இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும்?
கொரொனா வைரசின் மரபணு பகுதியை வரிசையை பயன்படுத்தி வைரஸ்களை வளர்த்து எடுத்து அவற்றின் இயக்கம் மனித செல்களில் எப்படி நுழைகிறது, நோயை எப்படி உருவாகிறது என்பது உள்ளிட்ட விவரங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றன. தடுப்பு மற்றும் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்க இந்த விபரங்களை முக்கியமானவையாகும்.
முதன் முதலில் மரபணு பகுதி வரிசைப்படுத்தப்பட்ட பின்னரே அமெரிக்காவில் தடுப்புமருந்து உருவாக்கப்பட்டு மனிதர்கள் மீதான சோதனை மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. தேபோல சீனாவிலும் முதற்கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது. முதற்கட்டத்தில் விலங்குகள் மீதும் மனிதர்கள் மீதும் சோதித்து பார்க்க வேண்டும்.
இரண்டாவது கட்டத்தில் தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து ஆராயப்பட வேண்டும் மருந்து. வெற்றி எனில் அந்த தடுப்பூசி நோயை தடுக்க கூடியது என்பதோடு பாதுகாப்பானது என்றும் உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட வேண்டும். அதன் பிறகு உலக நாடுகள், உரிய விதிமுறைகளின் அடிப்படையில் தடுப்பு மருந்திற்கு உரிமம் வழங்க வேண்டும்.
எனவே ஆய்விற்கான தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும் இது போன்று இரண்டு மாதங்களில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கருதக் கூடாது 18 மாதங்களாவது ஆகும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்புபிரதிநிதி டேவிட் தெரிவித்துள்ளார்.






