--- --:--:-- --

மதுரை அவனியாபுரத்தில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு..!

1

துரை மாவட்டம் பிரபல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகின்றன.

 

புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும். இதில் அவனியாபுரத்தில் இன்றும் பாலமேட்டில் 16-ம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

 

இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மதுரை ஆட்சியர் தலைமையில் வீரர்கள் உறுதி மொழி ஏற்று ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon