பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெற்ற செவிலியர்..!
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பு நோயாளிகளிடம் பணம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் ஷீலா.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நீண்ட வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரு தினங்களாக அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் கையூட்டு பெரும் வீடியோ சமூகவலை தினங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தஞ்சையில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு செவிலியருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் வழங்கிய நிலையில் சீலா அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் லஞ்சம் பெரும் வீடியோ வைரல் ஆகி வருவது பொது மக்களுடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





