--- --:--:-- --

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா மாற்றம்..!

1

லைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் புதிய தலைமைச் செயலாளராக முதலமைச்சரின் முதன்மை தனிச்செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

2021ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் மத்திய அரசுப் பணியில் இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிவ்தாஸ் மீனா, மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க மாநில அரசுப் பணிக்கு வந்த நிலையில், நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.

 

பின்னர், தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு ஓய்வு பெற்றதால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஷிவ் தாஸ் மீனாவுக்கு தலைமைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.ஓராண்டுக்கும் மேலாக தலைமை செயலாளராக உள்ள ஷிவ்தாஸ் மீனாவின் பணிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.

 

இந்நிலையில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக ஷிவ் தாஸ் மீனாவை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தலைமைச் செயலாளர் மாற்றம் உறுதியாகிவிட்டது என்றும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் 50-ஆவது தலைமைச் செயலாளராகப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

 

இதற்கான பட்டியலில், முதல் இடத்தில், மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதலமைச்சரின் முதன்மை தனிச் செயலாளருமான முருகானந்தத்தின் பெயர் இருப்பதாக கூறப்படுகிறது.ஏனென்றால், தமிழ்நாடு அரசில், மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த எஸ்.கே. பிரபாகர் சில நாட்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டதால், தற்போது உள்ளவர்களில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான முருகானந்தம், தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon