--- --:--:-- --

சசிகலாவிற்கு தொற்று பாதிப்பு குறைந்து இருப்பதாக மருத்துவமனை அறிக்கை..!

6

கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிற்கு தொற்று பாதிப்பு குறைந்து இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

 

காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த புதன்கிழமை சிறையிலிருந்து சிவாஜி நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 

மேலும் நுரையீரல் பகுதியில் 50 விழுக்காடு அளவுக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தொற்று பாதிப்பின் தன்மை குறைந்து அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும்10 மணிக்கு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிகிச்சைக்கு சசிகலா ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே சசிகலாவுடன் சிறையில் இருந்த அவரது உறவினர் இளவரசிக்கு ஆர்டிபிசி‌ஆர் மூலமாக காரணம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon