வரும் 26-ஆம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும்..!
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட இருக்கும் இடத்தில் வரும் 26-ஆம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் வேண்டும் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் எப்படி செயல்பட வேண்டும், எந்தெந்த பிரச்சினைகளை எழுப்ப வேண்டும் என்பன குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.







