--- --:--:-- --

சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை..!

4

சிகலா உடல்நிலை சீராக உள்ளது என்று பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை அடைந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரொனா பாதிப்பு இருந்தது உறுதியானது.

 

பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சசிகலா உணவு உட்கொள்வதாகவும் நடப்பதாகவும் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.

 

சசிகலா சிகிச்சைக்கு பின் விடுதலை ஆகிறார் என்றும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விக்டோரியா மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon