வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளரின் மருமகன் கத்தியால் குத்தி கொலை..!
சென்னை சூளைமேட்டில் வாடகை கேட்டதால் வீட்டின் உரிமையாளர் மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். சூளைமேடு ராதாகிருஷ்ணன் 2-வது தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது வீட்டின் இரண்டாவது மாடியில் நாராயணன் என்பவர் 10 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
பெயிண்டர் வேலை செய்து வந்த நாராயணன் பொது முடக்கம் காரணமாக ஐந்து மாதங்களாக வாடகை கொடுக்க வில்லை என கூறப்படுகிறது. நேற்றிரவு நாராயணனிடம் வாடகை தருமாறு சந்திரமோகன் மற்றும் அவரது மனைவி கலாவதி ஆகியோர் கேட்டுள்ளனர். அப்போது அவர்களிடையே வாய்தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து சந்திரமோகனின் மகன் சதீஷ் மற்றும் அவரது மனைவி சுகன்யா ஆகியோர் இரண்டாவது மாடிக்கு விரைந்துள்ளனர். இந்த நிலையில் மது போதையில் இருந்ததாக கூறப்படும் நாராயணன், சந்திரமோகன், சதீஷ், சுகன்யா ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுகன்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மற்ற இருவரும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து நாராயணனை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







