2 , 3 சதவிகிதம் மக்கள் போதிய சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருத்தம் !!!
கோவை மாவட்டம் தீத்திப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு விலையில்லா காய்கறிகள் விநியோகத்தை இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது,பேரூராட்சி,ஊராட்சி,நகராட்சி,மாநகராட்சி பகுதிகளில் கிருமி நாசினி போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.பொது மக்களும் போதிய சமூக இடைவெளி விட்டு செல்ல வேண்டும் என பேசினார்.
மேலும்,அம்மா உணவகங்களில் தினந்தோறும் 20 ஆயிரம் பேர் உணவருந்தி வருவதாகவும்,வெளிமாநில தொழிலாளர்கள் 18 ஆயிரம் பேருக்கு தினந்தோறும் தமிழக அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும்,பொதுமக்களும்சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும்,நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும்,மக்கள் இதனையும்,கொரோனாவின் தாக்குதலை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும்,98,99 சதவிகித மக்கள் சமூக இடைவெளியினை கடைபிடிப்பதாகவும்,2 , 3 சதவிகிதம் மக்கள் மட்டுமே போதிய சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.மேலும்,கோவையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான படுக்கைகள்,வெண்டிலேட்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,காருண்யா பல்கலைக்கழகத்தின் சார்பில் 500 படுக்கை கொண்ட தனது மருத்துவமனையை கொரோனாவிற்காக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசு ஒதுக்கியுள்ள 510 கோடி ரூபாய் நிதியுதவி போதுமான இருக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தமிழக முதல்வரை பொறுத்த வரை போதுமான நிதி.உணவு,வீடில்லாதோருக்கு போதுமான உதவி செய்து வருவதாகவும்,முதல்வர் மத்திய அரசிடம் கேட்டு போதுமான நிதியினை பெற்றுத்தருவார் என்றும்,மத்திய அரசும் போதுமான நிதியினை ஒதுக்கி கொடுப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.அதனை தொடர்ந்து தொண்டாமுத்தூர் ஒன்றியம் மத்வராயபுரம் ஊராட்சி சீங்குபதி பழங்குடியினர் கிராமப்பகுதிகளில் இருளர் இன மக்களுக்கு விலையில்லா காய்கறிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் தீத்திப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி,மத்வராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கிட்டுச்சாமி,தீத்திப்பாளையம் ஊராட்சி செயலர் கவிதகலா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






