பொது இடத்தில் மது அருந்திய ஊர்க்காவல் படை வீரர்கள்.. தட்டி கேட்ட காவலர்களை தாக்கும் காட்சி..!
பொதுவெளியில் மது அருந்தியவர்களை கண்டித்த தமிழக போலீசாரை துரத்தி துரத்தி தாக்கிய புதுச்சேரி காவல் படை வீரர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் மணிமாறன் காவலர் தங்கமணி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநில எல்லை பகுதியான மேட்டுப்பாளையத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த மூன்று பேரை அவர்கள் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கள் தலைமை காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதன் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசாரை வரவழைத்தார்.
அவர்கள் அங்கிருந்த மூன்று பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் காவலரை தாக்கியவர்கள் ஊர்காவல் படை வீரர்களான முனுசாமி, வசந்த் மற்றும் பெட்ரோல் நிலைய ஊழியர் பார்த்திபன் என்பது தெரியவந்தது மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.





