--- --:--:-- --

வரும் 11 ஆம் தேதி பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை..!

4

ள்ளி, கல்லூரி அரசு ஊழியர்களுக்கு வரும் 11ஆம் தேதி திங்கள் கிழமையும், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நார்த்தாமலை திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

 

தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் புதுக்கோட்டை நார்த்தாமலை விழாவிற்கு பக்தர்கள் வருவார்கள். விழாவை முன்னிட்டு நாளை மறுதினம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் கலெக்டர். புதுக்கோட்டை நார்த்தாமலை விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon