கர்நாடகாவில் மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பதாக கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
துண்டு அணிந்து மாணவர்களில் ஒரு பிரிவினர் ஹிஜாப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் விடுமுறை விடப்பட்டுள்ளது. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதால் நாங்களும் காவி ஷால் அணிந்து கொள்வோம் என மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக சர்ச்சை எழுந்து வருகிறது.
இதனால் கர்நாடகாவில் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.





