இந்து ஆண்.. இஸ்லாமிய பெண்.. நண்பர்களை தாக்கிய இளைஞர்கள்..!
லாட்ஜில் அறை எடுத்து தங்கிய ஆண் பெண் நண்பர்களை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள் வீடியோ வைரலானதையடுத்து வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் லாட்ஜுக்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் வந்துள்ளார்.
இதில் ஆண் ஹிந்து மதத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இஸ்லாமிய இளைஞர்கள் இவர்களை நோட்டமிட்டுள்ளனர். இருவரும் அறைக்கு சென்ற பிறகு அவர்களை பின்தொடர்ந்து சென்றவர்கள் லாட்ஜ ஊழியர்கள் கதவை திறக்குமாறு இளைஞர்கள் கூறியுள்ளனர்.
அவர் கதவை திறந்ததும் உள்ளே சென்று அவர்கள் இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து இருவரையும் லாட்ஜில் இருந்து வெளியே இழுத்து வந்து தாக்கியுள்ளனர்.
வேற்று மதத்தை சேர்ந்தவருடன் தங்குவதா என்ற கோணத்தில் அவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. சம்பவத்தை அவர்களை வீடியோவாக பதிவு செய்த நிலையில் அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






