11 முஸ்லிம் வேட்பாளர்களை தோற்கடித்த இந்து வேட்பாளர்!
உ.பி.யில் பல ஆண்டுகளாக சமாஜ்வாடி கோட்டையாக இருந்த குந்தர்கி தொகுதியை பாஜக கைப்பற்றியுள்ளது. 65% முஸ்லிம்கள் வசிக்கும் இத்தொகுதியில் பல கட்சிகள் 11 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தின.
ஆனால், சிங்கிள் இந்து வேட்பாளராக களம் கண்ட பாஜகவின் ராம்வீர் தாக்குர், அனைவரையும் தோற்கடித்து வாகை சூடியுள்ளார். முஸ்லிம்களுடன் பல ஆண்டுகளாக சகோதர உணர்வுடன் இவர் பழகி வந்ததே இந்த வெற்றிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.






