தமிழகத்தில் அதிகளவு வெப்பநிலை உயர வாய்ப்பு..!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிக அளவு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இரு நாட்களாக நிலவிய அதிக அளவில் வெப்பநிலை அடுத்த இரு நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






