முதியவர்களுக்கு உதவ ஹெல்ப் லைன் எண் அறிமுகம்..!
எல்டர் லைன் என்ற இலவச உதவி மைய தொலைபேசி எண் ஆயிரக்கணக்கான முதியோர்களுக்கு உதவி அளித்து வருவதாக சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை இணை அமைச்சர் ரத்தன் லால் தெரிவித்துள்ளார்.
உலக முதியோர் துன்புறுத்தல் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரொனா தடுப்பூசி போடும் நடைமுறையை எளிதாக்க வீடுகளுக்கு அருகே தடுப்பூசி மையங்களை அமைத்து மத்திய அரசு அளித்துள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு முதியவரும் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் ரத்தன்லால் வேண்டுகோள் விடுத்தார்.






