திருப்பூரில் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..!
திருப்பூரில் பணியாற்றும் வெளி மாவட்ட வெளி மாநில தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் சொந்த ஊர் செல்ல கிளம்பியதால் குமரன் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னலாடை துறை நகரம் திருப்பூர். திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த வெளி மாநிலத்தில் உள்ளவர்கள் தங்களது குடும்பத்தோடு திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
தீபாவளியை ஒட்டி அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல புறப்பட்டனர். இதனால் திருப்பூரில் பிரதான சாலையான குமரன் சாலையில் கடும் போராட்டத்தின் நெரிசல் ஏற்பட்டது.





