--- --:--:-- --

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த அதிமுக நிர்வாகிகள்..!

2

ரசு வேலை வாங்கி தருவதாக 27 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது போலி பணியாணையை வழங்கி மோசடி செய்தது உள்ளிட்ட புகார்களில் தோட்டக்கலை துறை உதவி அலுவலர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எல்லப்பன். நாற்றம்பள்ளி அதிமுக ஒன்றிய செயலாளர் ஆன இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பரமசிவம் மற்றும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கோட்டூர் தோட்டக்கலை துறை உதவியாளர் பாலதண்டாயுதம் ஆகியோர் தனது உறவினர்களுக்கு அரசு பணி வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

அதில் பரமசிவம் மற்றும் பாலதண்டாயுதம் ஆகியோர் டிஎன்பிஎஸ்சியில் தோல்வியடைந்த தனது மகன் உள்ளிட்ட நான்கு பேர் தேர்வில் வென்றது போல் மாற்றி அரசு பணி வாங்கி தருவதாக கூறினார் என தெரிவித்திருந்தார்.

 

இதற்காக போலி பணி நியமன ஆணைகளையும் வழங்கிய அவர்கள் 27 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார். இதனையடுத்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அதன்படி தோட்டக்கலைத் துறை உதவியாளர் பாலதண்டாயுதமுத்தை கைது செய்த காவல்துறையினர் பரமசிவம் உள்ளிட்ட மேலும் இதுவரை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon