நீலகிரி மாவட்டம் கூடலூரில் கொட்டி வரும் கனமழை..!
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனமழை கொட்டி வரும் நிலையில் நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் புதுவையில் உள்ள பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியும் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு நீர்வழிப் பாதைகள், சிறிய ஓடைகள் மற்றும் குளங்களையும் வைத்திருப்பதே காரணம் என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விளைநிலங்களில் தேங்கியிருக்கும் வாழை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் வருந்துகின்றனர். எனவே நீர் வழிபாடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





